உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை கனகவள்ளி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக 10ம் ஆண்டு விழா நடந்தது. அதனையொட்டி நேற்று சிறப்பு ேஹாமமும் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. விழாவில், திருமலை திருப்பதி அறங்காவலர் குழு முன்னாள் உறுப்பினர் குமரகுரு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மயில் மணி குமரகுரு, கோவில் அறங்காவலர் குழு தலைவர் சிவராஜ் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.