பழநி; பழநி, கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாதிரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாதிரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 25 வருடங்களுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. பிப்., 15,ல் முதல் கால வேள்வி மாலை 4:00 மணிக்கு துவங்கியது. இரண்டாம் கால வேள்வி நேற்று காலை 5:30 மணிக்கு துவங்கி நடைபெற்றது. வேள்வியில் வைக்கப்பட்ட புனித நீர் நிரம்பிய கும்ப கலசங்கள் எடுத்துவரப்பட்டு மூலவர் சன்னதி விமானத்தில் உள்ள கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை அமிர்தலிங்கம் குருக்கள், செல்வ சுப்பிரமணிய குருக்கள் நடத்தி வைத்தனர். நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.