திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் ரூ.7 லட்சம் மதிப்பிலான கண்ணாடி மாளிகை திறக்கப்பட்டது. உற்ஸவம், விசேஷ காலங்களில் தாயார், பெருமாள் இந்த கண்ணாடி மாளிகைக்குள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது விசேஷம். இதற்கான திறப்பு விழா அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ்பாலாஜி தலைமையில் நடந்தது. அறங்காவலர்கள் வாசுதேவன், சுசீலா முன்னிலை வைத்தனர். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், தொழிலதிபர் வேலுச்சாமி, சிவகுமார், ஒன்றிய தி.மு.க., செயலாளர் வெள்ளிமலை, மாநகர பொருளாளர் சரவணன், அபிராமி அம்மன் கோயில் அறங்காவலர்கள் வீரக்குமார், சண்முகவேல், மலைச்சாமி, பட்டாச்சாரியார்கள் ராஜப்பா, ராமமூர்த்தி, ரமேஷ், மணியம் அரவிந்தன் , கோயில் நிர்வாக பணியாளர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.