மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் 70 ஆண்டு ராதா கல்யாண மஹோத்ஸவம், தமிழகம் முழுவதுமிருந்து புகழ்பெற்ற பாகவதர்கள் பங்கேற்று பாடி பக்தர்கள் பஜனை பாடல்களுக்கு கோலாட்டத்துடன் ஆடி பாடி கொண்டாடினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஸ்ரீ ராதா கல்யாண ட்ரஸ்ட் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் ஸ்ரீ ராதா கல்யாண உற்சவம் கடந்த 14ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது 3 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் இருந்து புகழ் பெற்ற பாகவதர்கள் பங்கேற்று கீதகோவிந்தம் அஷ்டபதி பஜனை நாம சங்கீர்த்தனம் திவ்ய நாம பஜனை சங்கீத உபன்யாசம் உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து இன்று எழுபதாவது ஆண்டு ராதா கல்யாணம் நடைபெற்றது இதனை முன்னிட்டு உஞ்சவத்தி அஷ்டபதி பஜனை திவ்யநாம பஜனை மற்றும் பாகவத பஜனைகளுக்கு கோலாட்டத்துடன் ஆடிப் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்ந்து பெண்கள் மங்கலப் பொருட்களை சீர் வரிசையாக எடுத்துவந்து சமர்ப்பணம் செய்தனர் அதனையடுத்து திவ்ய நாம பஜனை திருமாங்கல்ய தாரணம் எனப்படும் ஸ்ரீ ராதா கல்யாணம் நடைபெற்றது இதனை அடுத்து மகா தீபாராதனை செய்யப்பட்டது. முன்னதாக பெண்கள் பங்கேற்று, திருமணம் சம்பந்தமான சடங்குகளை செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று ஆடி பாடி வழிபாடு செய்தனர்.