Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வயலூர் முருகன் கோவிலில் ... திருப்பரங்குன்றம் கோயிலில் மஹா சிவராத்திரி விழா சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது திருப்பரங்குன்றம் கோயிலில் மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் 18 படிகளில் ஏறியதும் நேரடி ஐயப்ப தரிசனம்: மார்ச் 14 முதல் சோதனை முறையில் அமல்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 18 படிகளில் ஏறியதும் நேரடி ஐயப்ப தரிசனம்: மார்ச் 14 முதல் சோதனை முறையில் அமல்

பதிவு செய்த நாள்

19 பிப்
2025
10:02

சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் 18 படிகளில் ஏறியதும் கொடி மரத்தின் இரு பக்கங்கள் வழியாகச் சென்று ஐயப்பசுவாமியை அதிக நேரம் தரிசிக்கும் புதிய திட்டம் மார்ச் 14- முதல் 6 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.


18 படிகளில் ஏறிய பின் பக்தர்கள் சபரிமலை சன்னிதானத்தில் சுற்றியுள்ள மேம்பாலத்தில் ஏற்றப்பட்டு ஸ்ரீ கோயில் இடது பக்கம் கீழே இறங்கி மூன்று வரிசைகளில் நின்று தரிசனம் செய்கின்றனர். நீண்ட நேரம் காத்திருந்து வரும் பக்தர்களுக்கு சில வினாடிகள் மட்டுமே ஐயப்பசுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதை தவிர்க்க மாற்று வழியை திருவிதாங்கூர் தேவசம் போர்டு யோசனை செய்தது. அதன்படி 18 படிகளில் ஏறியதும் கொடிமரம் மற்றும் பலிபீடத்தின் இரு பக்கங்கள் வழியாக பக்தர்களை பிரித்து வரிசையில் அனுப்பப்படுவர். அவர்கள் ஸ்ரீ கோயில் முன் செல்லும் வரை ஐயப்பன் விக்ரகத்தை தரிசித்தபடியே செல்ல முடியும். வரிசை ஒழுங்காக செல்வதற்காக நடுவில் நீள வாக்கில் உண்டியல் அமைக்கப்படுகிறது. இந்த புதிய திட்டம் மூலம் 15 மீட்டர் தூரம் வரை நடந்து சென்றபடி ஐயப்பசுவாமியை வணங்க முடியும். 30 வினாடிகள் வரை தரிசனத்திற்கான வாய்ப்பு உள்ளது.


இரு வரிசைகளில் இடது பக்கம் உள்ள வரிசை சற்று உயரமாகவும், வலது பக்கம் உள்ளது சற்று தாழ்வாகவும் இருக்கும். இரு வரிசையிலும் நிற்கும் பக்தர்கள் சேர்ந்து நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. வடக்கு வாசல் வழியாக இருமுடி இல்லாமல் வரும் பக்தர்கள் ஏற்கனவே உள்ள முதல் வரிசையில் சென்று தரிசிக்க முடியும். இந்த புதிய திட்டத்திற்கு சபரிமலை தந்திரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். கோயிலின் தாந்த்ரீக விதிகளிலோ, கணக்குகளிலோ மாற்றமில்லாததால் இவர்கள் இதை வரவேற்றுள்ளனர். கேரள உயர்நீதிமன்றமும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை மார்ச் 14-ல் திறக்கப்படும் போது அன்று முதல் ஆறு நாட்கள் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். இருப்பினும் சபரிமலையில் தற்போது உள்ள மேம்பாலம் அப்படியே இருக்கும். சீசன் காலத்தில் பக்தர்களின் நீண்ட கியூ மர கூட்டத்தைக் கடக்கும் போதும், ஏதாவது அவசர காலகட்டங்களிலின் போதும் பக்தர்கள் இந்த மேம்பாலத்தில் ஏற்றி நிறுத்தப்படுவர். இந்த மேம்பாலம் 1989 -ல் கட்டப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கம்பம் நடப்பட்டது. இதையடுத்து, ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் அருகே பட்டரைப்பெரும் புதுார் முருகன் கோவிலில், பழங்கால சுரங்கப்பாதை ... மேலும்
 
temple news
கோவை; கோவை, கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி, பூச்சாட்டு விழா நடந்தது. கோவையின் காவல் தெய்வமாக ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar