திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2025 05:02
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான பழனி ஆண்டவர் கோயிலில் கும்பாபிஷேக பணிகளுக்காக விமானத்தில் மூங்கில் சாரம் அமைக்கும் பணி இன்று துவங்கியது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயில்களான காசி விஸ்வநாதர் கோயில், பழனி ஆண்டவர் கோயில், சொக்கநாதர் கோயில், மாம்பலம்மன் கோயில் அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகளை அறங்காவலர் குழுவினர் சொந்த செலவில் செய்ய திட்டமிட்டு பிப். 10ல் பாலாலயம் நடந்தது. முதல் கட்டமாக விமானங்கள் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், பழனி ஆண்டவர் கோயில், சொக்கநாதர் கோயில்களில் கும்பாபிஷேக பணிகள் நேற்று துவங்கியது. கோயில் விமானங்களில் இன்று மூங்கில் சாரம் அமைக்கும் பணி நடந்தது.