Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில் ... திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலின் ரூ.3.4 கோடி சொத்து மீட்பு திருவொற்றியூர் தியாகராஜசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள்

20 பிப்
2025
02:02

மதுரை; மதுரை திருப்பரங்குன்றம் மலையை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர தாக்கலான வழக்கில், மனுதாரரின் மனுவை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று உத்தரவிட்டது.மதுரை சுந்தரவடிவேல் தாக்கல் செய்த பொதுநல மனு:


திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமிக்க மற்றும் ஆடு, கோழிகளை பலியிட முயற்சித்து, அமைதியின்மையை சிலர் ஏற்படுத்தியுள்ளனர். ஹிந்துக்களின் புனிதத்தலமான மலையை பாதுகாக்க வலியுறுத்தி, ஹிந்து முன்னணி சார்பில் பிப்., 4ல் திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது; அனுமதி மறுத்தனர். மதுரை மாவட்டத்தில் பிப்., 3 முதல் பிப்., 4 வரை போராட்டம், ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இரு நாட்களிலும் 144 தடையுத்தரவு அமலில் இருக்கும் என கலெக்டர் பிப்., 2 ல் உத்தரவிட்டார். தடையுத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.


மதுரை முருகன், ‘மக்கள் போராட்டத்தில் பங்கேற்க வர வேண்டாம். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்’ என பொதுநல மனு தாக்கல் செய்தார். ஹிந்து முன்னணி மதுரை மாவட்ட பொதுச்செயலர் கலாநிதி மாறன், ‘திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமிக்க முயற்சிப்போரை கண்டித்து, பிப்.,4 ல் அங்கு போராட்டம் நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’ என மனு செய்தார். பிப்., 4ல் அவசர வழக்குகளாக விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அன்றே பழங்காநத்தத்தில் போராட்டம் நடத்த அனுமதித்தது. அரசு தரப்பில் பிப்., 19ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சமணக் கோவில்கள், பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரை கோவிலை பாதுகாக்க வேண்டும். ஒட்டுமொத்த மலையையும் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். தொல்லியல் துறையின் அனுமதியுடன் யாரையும் மலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என மத்திய தொல்லியல் துறை இயக்குநர், தமிழக அறநிலையத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.


இம்மனு மற்றும் சுந்தரவடிவேல், முருகன் தாக்கல் செய்த மனுக்கள் நேற்று நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. தமிழக அரசு தரப்பு, ‘இம்மனுக்கள் பயனற்றதாகி விட்டன. மேலும் விசாரிக்க வேண்டியதில்லை’ என கூறியது.இவ்வழக்குகளில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க மனு செய்த மதுரை சரவணன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: கடந்த 1947 ஆக., 15ல் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் வழிபாட்டுத் தலங்கள் எந்த நிலையில் இருந்ததோ, அப்படியே தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991 கூறுகிறது. இது, பாபர் மசூதி – ராமஜென்ம பூமி விவகாரத்திற்கு பொருந்தாது என, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எந்த ஒரு வழிபாட்டுத் தலத்தையும் ஆய்வு செய்ய அனுமதிக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு, அங்கு நிலுவையில் உள்ளது.


இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள் கூறியதாவது: சுந்தரவடிவேல், முருகனின் மனுக்கள் காலாவதியாகி விட்டன. அம்மனுக்கள் மீதான விசாரணை முடித்து வைக்கப்படுகிறது. மற்றொரு மனுதாரரான ரமேஷ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அதை அதிகாரிகள் விரைவாக பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரயாக்ராஜ்; "பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இன்று 1.28 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களும், நேற்று வரை 59.31 ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் ராமரின் தெய்வீக தரிசனத்திற்காக இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகனை தரிசிக்க, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில்  வருடாந்திர மகாசிவராத்திரி ... மேலும்
 
temple news
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பிரம்மோற்சவம் வெகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar