ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2025 02:02
சேலம்; ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில் உள்ள பிரத்தியங்கிராதேவிக்கு தேய்பிறை அஷ்டமியொட்டி நடந்த பூஜையின் போது, ஸ்வர்ண பைரவர் புஷ்ப அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில் உள்ள, பிரித்தியங்கிரா தேவி கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி, சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. முன்னதாக, உலக நன்மை வேண்டி, யாக சிறப்பு யாக பூஜை நடந்தது. பிரித்தியங்கிராதேவி மற்றும் சொர்ண பைரவர் ஸ்வாமிகள், புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.