ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சியில் உலக நன்மைக்காக கூட்டு பிரார்த்தனை நாளை (7ம் தேதி) நடக்கிறது. ஆழ்வார்குறிச்சியில் ஸ்ரீஸ்ரீ முரளிதர சுவாமிஜியின் ஆசியுடன் குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிரினிடி சார்பாக உலக நன்மைக்காகவும், நோய்கள் ஏற்படாத வண்ணம் இருப்பதற்காகவும், மழை நன்றாக பெய்யவும் நாம வைபவம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. ஆழ்வார்குறிச்சி கீழகிராமம் வெங்கடாஜலபதி கோயிலில் நாளை (7ம் தேதி) மாலை 6.30 முதல் 8.30 வரை முரளிஜி கூட்டு பிரார்த்தனை நடத்துகிறார். நாளை மறுநாள் விக்கிரமசிங்கபுரம் கிருஷ்ணன் கோயிலிலும், வரும் 9ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை வள்ளியூர் சுந்தரராஜபெருமாள் கோயிலிலும், மாலை 6.30 முதல் 8.30 மணி வரை ரவணசமுத்திரத்திலும், 10ம் தேதி மாலை 6.30 முதல் 8.30 வரை சேரன்மகாதேவி வெங்கடாஜலபதி கோயிலிலும், 11, 12ம் தேதிகளில் அம்பை கிருஷ்ணசுவாமி கோயிலிலும் நாம வைபவம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடக்கிறது.அனைவரும் கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டுமென அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.