ஆழ்வார்குறிச்சி: கடையம் வட்டார கோயில்களில் இன்று (6ம் தேதி) மகாதேவ அஷ்டமி வழிபாடு நடக்கிறது. கார்த்திகை மாதம் வரும் அஷ்டமி மகாதேவ அஷ்டமி என அழைக்கப்படும். இன்று (6ம் தேதி) கடையம் கைலாசநாதர் - பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலில் மகாதேவ அஷ்டமியை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடக்கிறது. பைரவருக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி நடக்கிறது. சிவசைலம் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் கோயிலிலும் மகாதேவ அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், விசேஷ அபிஷேகம் நடக்கிறது.