Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆழ்வார்குறிச்சியில் நாளை கூட்டு ... வள்ளலார் ஏற்றிய ஜோதி அணைந்ததாக வதந்தி! வள்ளலார் ஏற்றிய ஜோதி அணைந்ததாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பைரவாஷ்டமி: கஷ்டங்கள் காற்றில் பறக்கும் பஞ்சாக பைரவரை வணங்குங்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 டிச
2012
12:12

ஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார். இவரை வழிபடுவதற்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி. அதில், கார்த்திகை அஷ்டமி மிகவும் உயர்ந்தது. அபிதான சிந்தாமணி என்ற நூலில், பைரவர் வரலாறு கூறப்பட்டுள்ளது. தாருகாரன் என்பவன், இறவா வரம் வேண்டும் என, சிவனிடம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் கூறினார். அவன் அகங்காரத்துட ன், ஒரு பெண்ணைத் தவிர, தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை, ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம். பல அட்டூழியங்கள் செய்த அவனுக்கு அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவ, பார்வதியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி, சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில் இருந்து, கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர், ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. காளம் (விஷம்) படிந்த அந்த பெண்ணுக்கு, காளி என பெயர் சூட்டினாள். காளிதேவி கடும் கோபத்துட ன் தாருகாரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம், கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின், அந்த கனலை ஒரு குழந்தையாக மாற்றிய காளி, அதற்கு பாலூட்டினாள். அதன்பின், சிவபெருமான், காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன், அந்த குழந்தைக்கு, பைரவர் என்று பெயர் வைத்தார்.

காளி, சிவன் ஐக்கியத்துடன், எட்டு மடங்கு சக்தியுடன், காளத்தை தன் உடலில் அடக்கிய அந்தக் குழந்தை, காளபைரவர் எனப்பட்டு தற்போது, காலபைரவர் ஆகியுள்ளது. இவரை தம் காவலுக்கு சிவபார்வதி நியமித்தனர். தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பர். சிலர், கண்டாலே கல்லெறிவர். இதுபோல், வாழ்க்கையில் இன்ப துன்பம் எது வந்தாலும், அதை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என, வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாக , நாய்வாகன ம் கருதப்படுகிறது. நாய்க்கு, வேதஞாளி  என்ற பெயர் இருக்கிறது. பைரவரை மூலவராகக் கொண்ட கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூரில் உள்ளது. இங்குள்ள பைரவர் முன், ஒரு யந்திரம் உள்ளது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இங்கு பைரவாஷ்டமி விழா சிறப்பாக நடக்கும். தஞ்சாவூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் செல்லும் வழியில், வாயு மேடு கிராமம் இருக்கிறது. இங்கிருந்து பிரியும் ரோட்டில், 2 கி.மீ., சென்றால், தகட்டூரைஅடையலாம். கேரளாவிலுள்ள வைக்கம் மகாதேவர் கோவிலில், கார்த்திகை தேய்பிறை அஷ்டமியை மகாதேவ வாஷ்டமி என்றபெயரில் விமரிசையாக நிகழ்த்துவர். அந்த நாளில், இங்கு அன்னதானம் செய்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும். இப்போதே பதிவுசெய்தால், சில ஆண்டுகளுக்குப் பின் தானம் செய்ய அனுமதி வழங்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மொட்டைக்கோபுரம் அருகில் உள்ள பைரவர் சக்தி வாய்ந்தவர். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோவிலில் உள்ள பைரவர், இரட்டை நாய்களுடன் காவல் செய்கிறார். பைரவருக்கு வடை மாலை, எலுமிச்சை மாலை அணிவிப்பது வழக்கம். கஷ்டங்கள் தீவிரமாகும் போது, காவல் தெய்வமான பைரவரை வணங்குங்கள். அவை காற்றில் பறக்கும் பஞ்சாகி விடும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.அக்னி நட்சத்திர காலம்; முன்னொரு ... மேலும்
 
temple news
கடலுார்; சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், உத்தராகாண்ட் மாநிலம், கிஷ்கிந்தா சமஸ்தானம், ஸ்வர்ணஹம்பியில் உள்ள ஸ்ரீ ஹனுமத் ஜன்ம பூமி ... மேலும்
 
temple news
சென்னை; சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் சித்திரைப் பெருவிழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவில், 63 நாயன்மார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar