Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஹா சிவராத்திரி: சிவன் கோவில்களில் ... மாசித் திருவிழா : ராமேஸ்வரத்தில் உலாவின் போது சுவாமி, அம்மன் ஆக்கிரமிப்பில் சிக்கினர் மாசித் திருவிழா : ராமேஸ்வரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேசிய திருவிழாவாக திகழும் கும்பமேளா: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேசிய திருவிழாவாக திகழும் கும்பமேளா: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டு

பதிவு செய்த நாள்

25 பிப்
2025
10:02

திருச்சி: இந்திய ஒருமைப்பாட்டுக்கும், கலாசார பாரம்பரியத்திற்கும், சேவை மனப்பான்மைக்கும் சிறந்த உதாரணமாக, தேசிய திருவிழாவாக கும்பமேளா நடைபெறுகிறது, என, ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.


உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறும் மஹா கும்பமேளாவில் பங்கேற்ற, காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று முன்தினம் இரவு, தனி விமானத்தில் திருச்சி வந்தார். அவர் கூறியதாவது: நம் கோயில்களில் பட்ஷகங்கா, சிவகங்கா, புஷ்கரணி, அக்னி தீர்த்தம் போன்றவற்றில் புனித நீராடுகிறோம். ஹரித்துவார், உஜ்ஜயினி, நாசிக், பிரயாக்ராஜ் போன்ற இடங்களில் மஹா கும்பமேளா நடைபெறுகிறது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், போகி தினத்தன்று துவங்கி, சிவராத்திரி வரை நடைபெறும் கும்பமேளா விசேஷமானது. பிரயாகம் என்பது மிக உயர்ந்த யாகம். கங்கை என்பது ஓங்காரத்தின் உருவம். கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்றும் சேர்ந்து ஓங்காரத்தின் உருவமாக திகழ்வதால், அதில், புனித நீராடுவதால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தோஷங்கள் நீங்கும். உயர்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று,வேதம் சொல்கிறது.


வேதத்தில், கங்கையின் சிறப்பு சொல்லப்பட்டுள்ளது. வேதம் என்பது எழுதா கிழவி; இறைவனின் மூச்சுக்காற்றாகவும் திகழ்கிறது. சரஸ்வதி நதியில் நீராடினால் புகழ் கிடைக்கும். பொதுவாக, ஆறுகள் கடலில் கலக்கும். ஆனால், மக்கள் கடல் ஆறுகளில் கலப்பது தான் கும்பமேளா. தற்போது நிகழ்ந்த கும்பமேளாவில், 52 கோடி மக்கள் புனித நீராடி உள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.மக்கள் மனதில் பக்தி நெறி ஆழமாக வேரூன்றி இருப்பதை எடுத்துக்காட்டும் விதமாக, கோடான கோடி மக்களை நேரடியாக கும்பமேளாவில் காண முடிகிறது. இந்த கும்பமேளாவில் தென்னாட்டில் இருந்தும், காசி தமிழ் சங்கம் மூலமாகவும் நிறைய பேர் பங்கு பெற்று, புனித நீராடி யாகங்கள் செய்துள்ளனர். இந்திய ஒருமைப்பாட்டுக்கும், கலாசார பாரம்பரியத்திற்கும், சேவை மனப்பான்மைக்கும் சிறந்த உதாரணமாக, தேசிய திருவிழாவாக கும்பமேளா நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar