கோவை; கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் மாசி மாத பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. விழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.