பதிவு செய்த நாள்
25
பிப்
2025
06:02
தஞ்சாவூர், ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும், திரியோதசி திதியில் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முந்தைய ஒன்றரை மணி நேரத்தை பிரதோஷ காலம் என்கிறோம். பிரதோஷத்தன்று விரதம் இருந்து, மாலையில் பிரதோஷ காலமான 04.30 முதல் 6 மணி வரையில் நடைபெறும் சிவ பூஜையில் கலந்து கொண்டு, சிவ தரிசனம் செய்தால் அனைத்து விதமான துன்பங்களும், தோஷங்களும் நீங்கி, சிவ பெருமானின் அருள் முழுவதுமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதிலும், ஒவ்வொரு கிழமைகளிலும் வரும் பிரதோஷத்திற்கு ஒவ்வொரு விதமான சிறப்பு உண்டு. அப்படி செவ்வாய்கிழமையில் வரும் பிரதோஷத்தை மங்களவார பிரதோஷம் என்கிறோம். இந்த பிரதேஷ நாளில் வில்வ இலை மீது, நெய் ஏற்றி வழிபாட்டால் சிறப்பு என்கின்றனர். அந்த வகையில், உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் மங்கள வார பிரதோஷத்தில் ஏராாளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, நந்தியம் பெருமானுக்கு நடந்த பால், மஞ்சள், தயிர் உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகத்தில் கலந்துக்கொண்டு வழிபட்டனர்.