திருப்பரங்குன்றம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கப்பரை பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2025 10:02
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கப்பரை விழா நடந்தது. கோயிலில் பிப். 17ல் காப்புக்கட்டுடன் திருவிழா தொடங்கியது. கப்பரை பூஜையை முன்னிட்டு சிவபெருமான், காளி, மாரி, ருத்ரன், இருளப்ப சுவாமி உருவங்கள் அரிசி மாவில் தயாரித்து வைத்து பரிவார தெய்வங்களுக்கு அசைவ உணவு படைத்து பூஜை நடந்தது. மூலவர்கள் அங்காளபரமேஸ்வரி, குருநாத சுவாமிக்கு சிறப்பு பூஜை முடிந்து பூசாரிகள் இரவு 12:00 மணிக்கு முனியாண்டி கோயில் சென்று பூஜை நடத்தினர். இன்று (பிப். 26) சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள உற்ஸவர் அங்காளபரமேஸ்வரி புறப்பாடாகி குருநாத சுவாமி கோயிலில் எழுந்தருள்வார். தினமும் அபிஷேக, ஆராதனை நடக்கும். நாளை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பூச்சப்பரம் கொண்டு செல்லப்பட்டு, அம்மன் எழுந்தருளி பாரி வேட்டை நிகழ்ச்சி நடைபெறும்.