பதிவு செய்த நாள்
26
பிப்
2025
03:02
அரும்புலியூர்; உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்டது சீத்தாவரம் கிராமம். இக்கிராமத்தில், ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான நீலாவதி அன்னை உடனுறை நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சிவராத்திரி அன்று, பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி, சிவராத்திரி தினத்தையொட்டி, நேற்று காலை நஞ்சுண்டேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அப்போது, சுவாமிக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, அரும்புலியூர் கொட்டாலத்தம்மன் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. அப்பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், அரும்புலியூர் படவேட்டம்மன் கோவில் தெரு வழியாக, நஞ்சுண்டேஸ்வரர் கோவிலை சென்றடைந்தது. பெண் பக்தர்கள் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.