பதிவு செய்த நாள்
26
பிப்
2025
04:02
மேட்டுப்பாளையம்; காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழா துவங்கியது.
காரமடையில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டது, நஞ்சுண்டேஸ்வரர் கோவில். இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று நடந்தது. காலையில், 5:00 மணிக்கு நடை திறந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து உற்சவர் நஞ்சுண்டேஸ்வரர், லோகநாயகி அம்மன் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்து, கோவில் மண்டபத்தில் வைத்தனர். கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டு சென்றனர். மாலை, 7:00 மணிக்கு ருத்ரா பூஜையுடன் மகா சிவராத்திரி பூஜை துவங்கியது. இரவு, 11:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12.30 மணிக்கு பெள்ளாதி சங்கமேஸ்வரர் கோவிலில் பூஜையும், அதிகாலை, 2:00 மணிக்கு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் மூன்றாம் கால பூஜை, விடியற்காலை, 5:00 மணிக்கு நான்காம் கால பூஜை ஆகிய பூஜைகள் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும், கோவில் அஸ்வின் குருக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சந்திரமதி, அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.