அயோத்தியில் மகாசிவராத்திரி விழா; ராமர் கோவிலில் உள்ள சிவனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2025 05:02
அயோத்தி; மகாசிவராத்திரியின் புனித நிகழ்வில், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி வளாகத்தில் உள்ள குபேர் திலாவில் அமைந்துள்ள சிவாலயத்தில் இன்று பக்தர்கள் பகவான் சிவனை மனதார வழிபட்டனர். பிரபு ஸ்ரீ ராம்லல்லா தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து கோயிலில் குவிந்து வருகின்றனர். குபேர திலா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, திலாவில் சிவலிங்கம் நிறுவப்பட்டபோது, செல்வத்தின் கடவுளான குபேரர் சிவபெருமானை வழிபட்டதாக வேதங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு மிக்க இங்கு மகாசிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.