12 அடி உயர நெல் மணிகளால் உருவான சிவலிங்கம்; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2025 05:02
சேலம்; மகா சிவராத்திரி முன்னிட்டு உணவிற்கு குறைவில்லாமல் இருக்க 12 அடி உயரத்தில் கோடிக்கணக்கான நெல் மணிகளைக் கொண்டு உருவான சிவலிங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிவபெருமானுக்கு உகந்த நாளான மாசி மாதத்தில் அமாவாசை முதல் நாளன்று வரக்கூடிய மகா சிவராத்திரி எனப்படும் இந்த நாளில் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் இரவு நேரத்தில் செய்யப்பட்டு பக்தர்கள் கண்விழித்து விரதம் மேற்கொண்டால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனடிப்படையில் உலகம் முழுவதும் மகா சிவராத்திரியை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்திலும் அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரி பூஜை வெகு விமர்சையாக நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி திருக்கோவில் வாசவி கிளப் மற்றும் பொன்னம்மாபேட்டை ஆரிய சமாஜம் இணைந்து மகா சிவராத்திரி வைபவம் கொண்டாடப்பட்டது. கோடிக்கணக்கான நெல் மணிகளைக் கொண்டு சிவலிங்கம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார் கோடிக்கணக்கான நெல்மணிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு லட்சார்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்ற கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு வாசலை மலர்களாலும் விலை உயர்ந்த நகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டனர். தொடர்ந்து குருக்கள் அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. மகா சிவராத்திரி வைபவத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் அன்னதானம் வழங்கப்பட்டன.