பழநி மாசித் திருவிழா: பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2025 05:02
பழநி:பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று திருக்கம்பம் சாட்டுதல் நடைபெற்றது. கிழக்கு ரத வீதியில் பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம்
பழநிமுருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மாரியம்மன் கோயில் கிழக்கு ரத வீதியில் உள்ளது ஆண்டுதோறும் மாசி திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பிப்.21., இரவு 8:00 மணிக்கு முகூர்த்தக்கால் நடுதல் உடன் மாசி திருவிழா துவங்கியது. பிப்.,25, காலை காலியாளர் திருக்கம்பதிற்கு அரிவாள் எடுத்துக் கொடுத்தல், அலங்கரித்தல் நடைபெற்றது. வடக்கு கிரி வீதியில் துர்க்கை அம்மன் கோயில் அருகே உள்ள மரத்தில் கம்பம் வெட்டப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மாரியம்மன் கோயில் முன் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கம்பம் கோயில் முன் நடப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் பால், மஞ்சள் நீரில் கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து குழுவாகவும் தனித்தனியாகவும் அபிஷேக தீர்த்தத்தை எடுத்து வந்து கம்பத்திற்கு ஊற்றி வருகின்றனர். கிழக்கு ரத வீதி விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவிலில் பக்தர்கள் தங்கி நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.