Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மாசித் திருவிழா: பக்தர்கள் ... தஞ்சை பெரிய கோவிலில் சிவராத்திரி விழா: விடிய, விடிய சிவ தரிசனம் செய்த பக்தர்கள் தஞ்சை பெரிய கோவிலில் சிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈஷாவில் மஹா சிவராத்திரி கொண்டாட்டம்; விண்ணதிர முழங்கியது ‘ஓம் நமசிவாய!’
எழுத்தின் அளவு:
ஈஷாவில் மஹா சிவராத்திரி கொண்டாட்டம்;  விண்ணதிர முழங்கியது ‘ஓம் நமசிவாய!’

பதிவு செய்த நாள்

27 பிப்
2025
10:02

கோவை; கோவை ஈஷா யோகா மையத்தில், ‘ஈசனுடன் ஓர் இரவு’ மஹா சிவராத்திரி நிகழ்ச்சியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘மகா யோகா யக்னா’ தீபமேற்றி துவக்கி வைத்தார். கோவை, ஈஷா யோகா மையத்தில், 31வது ஆண்டு மஹா சிவராத்திரி விழா நேற்று நடந்தது. தலைமை விருந்தினராக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். சத்குரு ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். ஈஷா யோகா மைய சூரிய குண்டத்தில், அமித்ஷா வழிபாடு செய்தார். அவருக்கு, ‘அச்சத்துக்கு அப்பால்’ எனப் பொருள்படும், ‘அபயசூத்ரா’ வை கையில் கட்டிவிட்டார் சத்குரு. தொடர்ந்து, அங்கிருந்து நடந்து சென்று, நந்தி சிலைக்கு தாமரை மலர் சமர்ப்பித்து, வழிபாடு செய்தார்.


பின்னர் லிங்க பைரவி சன்னதிக்குச் சென்ற அமித் ஷாவுக்கு, அங்கிருந்த மும்மூர்த்திகளின் ஓவியம் குறித்து சத்குரு விளக்கினார். அங்கிருந்த ஆலமரத்துக்கு, அமித் ஷா, புனித நீர் ஊற்றி வழிபாடு செய்தார். தொடர்ந்து, திரிசூலத்துக்கு நெய் தீபம் ஏற்றினார். லிங்க பைரவிக்கு தேங்காய், மஞ்சள், நைவேத்தியம் படைத்து வழிபட்டார். லிங்க பைரவி முன் வைத்து அர்ச்சித்த, லிங்க பைரவி தேவின் உருவ பதக்கத்துடன் கூடிய தங்கச் சங்கிலியை, சத்குரு, அமித் ஷாவுக்கு அணிவித்தார்.


பஞ்சபூத க்ரியா; மஹா சிவராத்திரியின் முக்கிய அங்கமாக, தியானலிங்கத்தில் சத்குரு நிகழ்த்திய பஞ்சபூத க்ரியாவில், அமித் ஷா பங்கேற்றார். அப்போது, முக்கிய பிரமுகர்களுக்கு, தியானம் ஆனந்தம் என்ற வாசகம் அடங்கிய, கருப்பு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. பின்னர், சத்குரு இயக்கிய வாகனத்தில், அமித் ஷா மேடைக்கு வந்தார். அங்கு, ஆதியோகி முன்புள்ள யோகேஸ்வர லிங்கத்தை வழிபட்டார். தொடர்ந்து, மஹா யோகா யக்னா தீபத்தை ஏற்றி, மஹா சிவராத்திரி விழாவை அமித் ஷா துவக்கி வைத்தார்.


பரவசப்படுத்திய இசை நிகழ்ச்சி; நிகழ்ச்சியில், சவுண்ட்ஸ் ஆப் ஈஷா மாணவர்கள், பாடகர்கள் சந்தீப் நாரயண், சத்யபிரகாஷ், சுபா ராகவேந்திரா, ‘பாரடாக்ஸ்’ தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய், அதுல், குஜராத் நாட்டுப்புறக் கலைஞர் முக்திதான் காத்வி, இந்திய ஆன்மிக பாடல்களைப் பாடி சமூக வலைத்தளங்களின் பிரபலம், ஜெர்மனியின் காஸன்ட்ரா மே உள்ளிட்ட இசைக்கலைஞர்களின் இசை, பார்வையாளர்களை, பரவசத்தில் ஆழ்த்தியது. இடையிடையே சத்குரு நடனமாடிய போது, பார்வையாளர்களின் ஆரவாரம், உச்சத்துக்கு சென்றது. ஒடிசா கவர்னர் ஹரிபாபு கம்பஹம்பதி, பஞ்சாப் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், மத்திய சட்ட மற்றும் பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் முருகன், மஹராஷ்டிரா மாநில, மண் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சஞ்சய் ரத்தோர், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; நாடு முழுவதும் மகாசிவராத்திரி விழா  விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாசி மாதம் கிருஷ்ணபட்சம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது.  ... மேலும்
 
temple news
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மதுரை; ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் வரும் சிவராத்திரி தினம், மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த ... மேலும்
 
temple news
உசிலம்பட்டி; மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மாசிப்பச்சை மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar