அம்மையார் குளத்தில் களிமண் சிவ லிங்கம் வைத்து சிவநாம அர்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2025 10:02
காரைக்கால்; காரைக்காலில் சிவராத்திரியை முன்னிட்டு அம்மையார் குளத்தில் களிமண் சிவன்லிங்கம் வைத்து சிவநாம அர்ச்சனை செய்து சிவப்பெருமாளை பக்தர்கள் வழிப்பட்டனர்.
காரைக்கால் அம்மையார் குளத்தில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று தர்மரசஹண ஸ்மிதி சார்பில் 3ஆயிரம் களிமண் சிவன்லிங்கம் வைத்து சிவநாம அர்ச்சனை செய்து சிவப்பெருமாளை பக்தர்கள் வழிப்பட்டனர்.காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தர்மசஷண ஸமிதி நடத்தும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவன்பெருமாள் பக்தர்கள் அம்மையார் குளக்கரையில் தங்கள் குடும்பம். தொழில்கள், மாணவர்கள் படிப்பு,திருமண உள்ளிட்ட பல்வேறு நன்மைவேண்டி பக்தர்கள் களிமண் செய்யப்பட்ட சிவன்லிங்கம் ரூத்ராச்சை,பூஜைபெருட்கள் ஆகியவற்றை கொண்டுவந்து சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் வழிப்பட்டனர்.இதில் 3ஆயிரம் சிவப்பெருமாள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாக்கான ஏற்பாடுகளை சிவராத்திரி விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.