ஸ்ரீரங்கம் மாசி தெப்பத்திருநாள்; வெள்ளி ஹம்ச வாகனத்தில் உலா வந்த நம்பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2025 11:03
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா முதல் நாள் மாலை வெள்ளி ஹம்ச வாகனத்தில் நம்பெருமாள் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா தொடங்கியது. தெப்பத்திருவிழாவின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியான் பல்லக்கில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு ரெங்கவிலாஸ் மண்டபத்திற்கு காலை 8.15 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்தவாறு நம்பொருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் புறப்பட்டு உள்வீதிகளில் வலம் வந்து இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தெப்பத்திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று (3ம் தேதி) ஹனுமந்த வாகனத்திலும், நாளை கற்பகவிருட்ச வாகனத்திலும் நம்பெருமாள் வலம் வந்து அருள்பாலிப்பார்.