திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ3.91கோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2025 01:03
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்ச் மாதம் உண்டியல் வருமானம் ரூ3.91கோடி கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதம் இரண்டு முறை எண்ணப்படும். இந்த மாதம் உண்டியல் எண்ணும் பணி முதல் முறையாக கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில்தொடங்கி பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன. கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர்(பொறுப்பு) ஞான சேகரன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இதில், சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரபணி குழுவினர், மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர்.
இந்த உண்டியல் எண்ணும் பணியினை அறங்காவல் குழு தலைவர் அருள்முருகன் நேரில் பார்வையிட்டார்.இன்று எண்ணப்பட்ட நிரந்தரஉண்டியலில் இருந்து ரூ.3கோடியே 91லட்சத்து 3 ஆயிரத்து 758 ரூபாய், மார்ச் மாதம் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 1 390கிராமும், வெள்ளி 23,500கிராமும் , 752வெளிநாட்டு பணமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.