கோவை கோனியம்மன் கோயிலில் அக்னி கம்பத்திற்கு நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2025 04:03
கோவை; கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி கோவை ராஜவீதி தேர் திடலில் அலங்கரிக்கப்பட்ட தேர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து புலி வாகனம், கிளிவாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகனம் ஆகியவற்றில் உற்சவர் அம்மன் திருவீதியுலா வந்தார். எட்டாம் நாளான இன்று இரவு 8 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாளான நாளை மதியம் 2 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக கோவை பெரிய கடைவீதியில் அமைந்துள்ள கோவிலின் உட்பிரகாரத்தில் அக்னி கம்பம் நடப்பட்டு அதற்கு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. அக்னி கம்பத்திற்கு பொதுமக்கள் திரளாக நீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். அத்துடன் உப்பு மிளகு கலந்து அம்மனுக்கு படைத்தனர். விழாவில் பத்தாம் நாள் குதிரை வாகனத்தில் அம்மன் காட்சியளிக்கிறார்.11ம்நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 12ம் நாள் யாடி வாகனத்தில் காட்சி தருவார். தொடர்ந்து நிறைவு நாளான 14-ஆம் நாள் வசந்த விழா வைபத்துடன் விழா நிறைவடைகிறது.