Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோனியம்மன் கோயிலில் அக்னி ... ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் மாடுகள் உலா : பக்தர்கள் பீதி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாட்டரசன்கோட்டை கரிகால சோழீஸ்வரர் கோயில் மாசி மக விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
நாட்டரசன்கோட்டை கரிகால சோழீஸ்வரர் கோயில் மாசி மக விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

04 மார்
2025
05:03

சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் சிவகாமி அம்மன், கரிகால சோழீஸ்வரர் கோயில் மாசி மக திருவிழா இன்று கொடியேற்றம் நடந்தது. 


சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் மார்ச் 3 ல் மாசி மக திருவிழா அனுக்கை, கணபதி ஹோமம் நடந்தது. அன்று மாலை வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், பாலிகை பூஜை நடந்தது. இன்று காலை 8:15 மணிக்கு இரண்டாம் கால பூஜை துவங்கியது. காலை 11:30 மணிக்கு கோயில் கொடிமரத்தில் மாசி மக திருவிழா கொடியேற்றம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை யாகசாலை பூஜை துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் இரவு 7:30 மணிக்கு சுவாமி அம்பாளுடன் திருவீதி உலா நடக்கிறது. மார்ச் 7 இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, மார்ச் 9 காலை 10:30 முதல் 11:30 மணிக்குள் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.


தேரோட்ட உற்ஸவம்: மார்ச் 12 அதிகாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன், சுவாமி எழுந்தருள்வர். சிறப்பு ஆராதனையை தொடர்ந்து காலை 10:10 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேர் நான்கு ரதவீதியை சுற்றி வந்து நிலையை அடையும். மார்ச் 13 காலை 10:30 முதல் 11:15 மணிக்குள் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. இரவு 7:15 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் எஸ்.கணபதிராம், கவுரவ கண்காணிப்பாளர் கருப்பையா உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள க்ஷேத்ரபாலகத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ருத்ரனுக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar