பனி லிங்க தரிசனம்; ஜூலை 3ல் அமர்நாத் யாத்திரை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2025 01:03
ஜம்மு: ஜம்மு - -காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் அமர்நாத்தில், 12,756 அடி உயரத்தில் உள்ள குகை கோவிலில், பனியால் உருவாகும் சிவலிங்கத்தை தரிசிப்பதற்காக, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான யாத்திரை தொடர்பாக, அமர்நாத் கோவில் வாரிய கூட்டம், அதன் தலைவரும், ஜம்மு - -காஷ்மீர் கவர்னருமான மனோஜ் சின்ஹா தலைமையில் நேற்று நடந்தது. இதுகுறித்து, கவர்னர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3ல் துவங்குகிறது. அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம், கந்தர்பால் மாவட்டத்தின் பால்டால் ஆகிய இரண்டு வழித்தடங்களிலும் யாத்திரை துவங்கும். 39 நாட்கள் இந்த யாத்திரை நீடித்து, ஆக., 9 ரக் ஷா பந்தன் நாளில் நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.