பதிவு செய்த நாள்
07
மார்
2025
11:03
திருவள்ளூர்; சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கடந்த பிப்.,18ல், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. பட்டரைபெரும்புதுாரில் உள்ள, பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவிலை அகற்றப்போவதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர். கோவில் கருவறைக்குள் சுரங்கப்பாதை போன்ற அமைப்பு இருப்பதை, தொல்லியல் அதிகாரிகள் கண்டறிந்தனர். இது தொடர்பாக, தீயணைப்புத்துறை அதிகாரிகள் உதவியுடன் நேற்று காலை, கோவில் சுரங்கப்பாதைக்குள், மாவட்ட தொல்லியல் அலுவலர் லோகநாதன் ஆய்வு செய்தார்.
பின் அவர் கூறியதாவது: கோவிலில் தரைத்தளத்தின் உள்ளே, 10 அடி உயரம், 8 அடி அகலத்தில், 2 அறைகள் மட்டும் உள்ளன. இந்த அறைகள், கோவில் சிலைகள், நகைகள், ஆவணங்கள் பாதுகாக்க உருவாக்கி இருக்கலாம். அறைக்குள் எந்த வித பொருட்களும் இல்லை. சுரங்கப்பாதை செல்வதற்கான வழித்தடம் எதுவும் உருவாக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.