பதிவு செய்த நாள்
10
மார்
2025
11:03
குன்றத்துார்; குன்றத்துாரில் மலை மீதுள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில், கடந்த 3ம் தேதி, மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றம் நடந்தது. தினமும் காலை, மாலை ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, வீதி உலா வந்தார். முக்கிய விழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வசேனாவுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி, வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகர், சங்கீதா கார்த்திகேயன், ஜெயகுமார், கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா ஆகியோர் ய்திருந்தனர். அறங்காவலர்கள் குழு முயற்சியால், 496 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு முதல், பிரம்மோத்சவ விழா நடத்தப்படுகிறது.