திருச்செந்துார் முருகன் கோவிலில் பச்சை சாத்தி அபிஷேகம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2025 11:03
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மாசித்திருவிழாவை முன்னிட்டு பச்சை சாத்தி அபிஷேகம் நடந்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்து வருகிறார். 8ம்திருவிழாவான இன்று பச்சை சாத்தி அபிஷேகம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 12ம் தேதி காலை நடக்கிறது. 13ம் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.