விழுப்புரம்; விழுப்புரம் சங்கர மடத்தில் நடந்த சந்திரமவுலீஸ்வரர் பூஜையில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார். விழுப்புரத்தில் உள்ள காஞ்சி மகா பெரியவர் அவதார ஸ்தலமான, சங்கர மடத்தில், நேற்று காலை 10:30 மணிக்கு மகா திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் பூஜை நடந்தது. காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூஜை செய்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து, கோயில் பூசாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.