பதிவு செய்த நாள்
10
மார்
2025
01:03
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு, இன்று காலை சண்முகர் பச்சை சாத்தி திருக்கோலத்தில் விஷ்ணு அம்சத்தில் அருள்பாலித்தார்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். ஏழாம் திருநாளான நேற்று அதிகாலை 1:00 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், பின்னர் மற்ற கால பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து, சுவாமிசண்முகர் காலையில் சண்முகவிலாச மண்டபத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார்.
விழாவில் எட்டாம் திருநாளான இன்று மதியம் 12:00 மணிக்கு பச்சை சாத்தி சப்பரத்தில் விஷ்ணு அம்சமாக சுப்பிரமணிய சுவாமி வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 10ம் திருநாளான மார்ச் 12ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.