பதிவு செய்த நாள்
10
மார்
2025
01:03
கடம்பத்துார்; கடம்பத்துார் பகுதியில் திரிபுரசுந்தரி சமேத முத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், 21 லட்சம் ரூபாயில் சீரமைக்கப்பட்டது. முன்னதாக, கடந்த 5ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது. நேற்று காலை 8:10 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடந்தது. இதில், முத்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ரா.விக்னேஷ், ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவஞானம், இணை ஆணையர் அனிதா, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், எம்.எல்.ஏ.,க்கள் திருத்தணி – எஸ்.சந்திரன், கும்மிடிப்பூண்டி – டி.ஜெ.கோவிந்தராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.