Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயிலுக்கு நேர்த்திக்கடனாக நெல் ... திருக்கச்சி நம்பிகள் கோவிலில் தெப்ப உத்சவம் கோலாகலம் திருக்கச்சி நம்பிகள் கோவிலில் தெப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

10 மார்
2025
03:03

மேல்மருவத்துார்; மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.


சோத்துப்பாக்கம் கிராமத்தில் அஞ்சூரம்மன் கோவில் அருகே பழமையான பாலமுருகன் கோவில் உள்ளது. கோவில் புணரமைப்பு பணிகள் செய்ய விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் முடிவு செய்து, திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பாலமுருகன், பக்த ஆஞ்சநேயர், பரிவார மூர்த்திகள் மற்றும் நவகிரக தெய்வங்களின் கோவில், கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவுற்று, மஹா கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, யாகசாலை அமைக்க பந்தக்கால் நடப்பட்டது. கடந்த 7ம் தேதி காலை 8:00 மணிக்கு, கிராம தேவதை வழிபாடு, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று முன்தினம், காலை 8:30 மணி அளவில், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், கோபுர கலசம் பதிய வைத்தல், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜைகள், பாலமுருகன் சிலை பிரதிஷ்டை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு மங்கல இசை, நான்காம் கால யாகசாலை பூஜைகள், விசேஷ திரவிய ஹோமம், நாடி சந்தனம், தத்வார்ச்சனை, ஸ்பருஷாஹூதி, நாமகரணம், தம்பதி சங்கல்பம், கலச புறப்பாடு நடந்தது. காலை 10:15 மணிக்கு, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், விமான கோபுரத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 10:30 மணிக்கு மூலவர் பாலமுருகன், பக்த ஆஞ்சநேயர், பரிவார மூர்த்திகள் மற்றும் நவகிரகங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மஹா அபிஷேக அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. இரவு, வானவேடிக்கையுடன், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், பாலமுருகன் வீதி உலா நடந்தது. இன்று முதல் 48 நாட்கள் தினமும் மண்டலாபிஷேக பூஜை நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar