கோயிலுக்கு நேர்த்திக்கடனாக நெல் செலுத்தும் விவசாயிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2025 03:03
திருவாடானை; திருவாடானை தாலுகாவில் நெல் அறுவடை பணிகள் நடந்து வரும் நிலையில் நேர்த்திக்கடனாக கோயில்களுக்கு விவசாயிகள் நெல் வழங்கி வருகின்றனர். இறைவினிடம் வேண்டிக் கொண்ட வேண்டுதல்கள் நிறைவேறிய பின் செலுத்தும் நன்றிக் கடனாக காணிக்கை செலுத்துவது, நிலங்களை இறைவன் பெயருக்கு எழுதித்தருவது, ஆபரணங்களை செய்து தருவது, கால்நடைகளை கோயிலுக்கு தருவது, கோழி, சேவல், உப்புகளை கொடுப்பது வழக்கம். இந்நிலையில் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விதைப்பு பணியின் போது இந்த ஆண்டு நன்றாக விளைச்சல் ஆகும் பட்சத்தில் குறிப்பிட்ட அளவு நெல்லை கோயிலுக்கு தானமாக வழங்குகிறேன் என வேண்டிக் கொண்டார்கள். அதன்படி இந்த ஆண்டு திருவாடானை தாலுகாவில் விளைச்சல் நன்றாக இருந்ததால், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்களில் விவசாயிகள் நெல்லை நேர்த்திக் கடனாக வழங்கினர்.