Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 100வது ஆண்டு தென்னேரி தெப்போற்சவம் வடாரண்யேஸ்வரர் கோவில் குளத்தில் பாசிகள் வழுக்கி விழும் பக்தர்கள் வடாரண்யேஸ்வரர் கோவில் குளத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் தியாகராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் தியாகராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்;  பக்தர்கள் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

10 மார்
2025
05:03

திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவிலில் மாசி மாதம் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான, திருத்தேரோட்டம், இன்று காலை நடந்தது. 46 அடி உயர திருத்தேரில், உற்சவர் சந்திரசேகரர் நீலப்பட்டு உடுத்தி கையில் வில் அம்பு ஏந்தியும், திரிபுர சுந்தரி தாயார் பச்சை பட்டு உடுத்தியும், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின், மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, ‘ஒற்றீசா தியாகேசா’ முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்தனர். தேரை வரவேற்கும் விதமாக, சிவனடியார்கள் திருவாசகம் பாடியும், சிறுமியர் கோலாட்டம் ஆடியும், தெய்வ வேடங்கள் அணிந்தும் அணிவகுத்தனர். திருத்தேரானது, சன்னதி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தெற்கு, மேற்கு, வடக்கு மாடவீதிகளில் வழியாக, மீண்டும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சன்னதி தெரு வந்து, மாலையில் நிலையை அடைந்தது. திருத்தேரில் இருந்து சந்திரசேகரர் ஆலயத்திற்கு எழுந்தருளல் வைபவம் நடந்தது. மற்றொரு முக்கிய நிகழ்வான, கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், 12ம் காலை 10:10 – 11:54 மணிக்குள்ளாக நடக்கிறது. மாலை, 63 நாயன்மார்கள் உற்சவம், இரவு மகிழடி சேவை நடக்கும். 13ம் தேதி, தீர்த்தவாரி கொடியிறக்கம்; 14ம் தேதி, பின் இரவில், தியாகராஜர் 18 திருநடனம், பந்தம் பறி உற்சவத்துடன் திருவிழா நிறைவுறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar