பதிவு செய்த நாள்
10
மார்
2025
04:03
காஞ்சிபுரம்; வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி கிராமத்தில், ஆண்டுதோறும் தாதசமுத்திர தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு, 100வது ஆண்டு தெப்போற்சவத்தை முன்னிட்டு, மார்ச்- 8ம் தேதி, இரவு 9:30 மணிக்கு, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்து, வரதர் புறப்பட்டு சென்றார். நேற்று அதிகாலை, தென்னேரி வந்தடைந்த பின், நாவிட்டான்குளம், திருவாங்கரணை, குண்ணவாக்கம், அகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று, அதே இரவு 9:00 மணி அளவில், தென்னேரி உற்சவ மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. இரவு 10:30 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட தென்னேரி தெப்பலில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்தார். பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா…. என, கோஷம் எழுப்பி வணங்கி சென்றனர்.