தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களான சக்கரபாணி  கோவில், ஆதிவராக பெருமாள் கோவில், ராஜகோபாலசாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில்,  கடந்த 4ம் மாசிமக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின், முக்கிய நிகழ்வான இன்று (12ம் தேதி), சக்கரபாணி கோவில்  தேரோட்டம் நடைபெற்றது. தேரில், சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட எழுந்தருளினார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சக்கர ராஜா, சக்கரராஜா என கோஷமிட்டப்படி, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.