காரைக்குடி; சிவகங்கை மாவட்டம் கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் – சுந்தரேஸ்வரர் கோவில் மாசிமகத் தேரோட்டம் நேற்று நடந்தது. இக்கோவில் மாசிமகத் திருவிழா மார்ச் 3 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமிபுறப்பாடு நடக்கிறது. மார்ச் 10ல் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து மாலையில் தேரோட்டம் நடந்தது. இதில், கல்லல் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இன்று தீர்த்தவாரியும், சப்தாவரணம், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.