பதிவு செய்த நாள்
12
மார்
2025
04:03
இளையான்குடி; இளையான்குடி அருகே சானாரேந்தல் மாதா புரத்தில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கிறிஸ்தவர்கள் கட்டிய ஹிந்து கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இளையான்குடி அருகே சானாரேந்தல் மாதாபுரத்தில் மாணிக்கவள்ளி அம்மன் கோயில் சிதிலமடைந்து கிடந்ததை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்களான மாணிக்கம்,சுரேஷ், ஜெயராஜ் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சார்பில் கடந்த சில மாதங்களாக கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவு பெற்றது தொடர்ந்து இன்று காலை கும்பாபிஷேகத்திற்காக சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயில் கோபுரத்திற்கு கொண்டு சென்று புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். முன்னதாக கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவில் எம்.எல்.ஏ.,தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், நிர்வாகிகள் காளிமுத்து,கருணாகரன், கண்ணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை காரக்குளம்,சானாரேந்தல் மாதாபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.