பதிவு செய்த நாள்
12
மார்
2025
04:03
புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அடுத்த சாமியார் பேட்டை கடற்கரையில், மாசிமகத்தையொட்டி ஏராளமான சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்றன.
புதுச்சத்திரம் அடுத்த சாமியார் பேட்டை, பெரியக்குப்பம் கடற்கரை பகுதிகளில் மாசி மகத்தை முன்னிட்டு, ஏராளமான சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்பது வழக்கம். மாசி மகமான இன்று புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டை கடற்கரையில் தீர்த்தனகிரி, வேளங்கிப்பட்டு, அலமேல்மங்காபுரம், சின்னாண்டிக்குழி, தச்சம்பாளையம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்றன. அதேபோல் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் கம்பளிமேடு, குள்ளஞ்சாவடி, பெரியக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, 25க் கும் மேற்பட்ட சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்றன. சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக், புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.