உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மதுார் கிராமம். இந்த கிராமத்தில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. மதுார் கிராமத்திற்கு சொந்தமான இந்த கோவிலில், ஆண்டுதோறும், மாசி மக விழா கோலாகலமாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலையில் சீனீவாசப் பெருமானுக்கு, தீபாராதணை செய்து, பல்வேறு பூஜைகள் நடந்தன. அதை தொடர்ந்து, மதுார் மலையடிவாரத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அப்போது, மலர் அலங்காரத்தில் எழுந்தருளி சீனிவசாப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து தீபாராதணை மற்றும் வீதியுலா நடந்தது.