கொள்ளிடம் ஆற்றங்கரையில் அன்பில் சுந்தராஜ பெருமாள் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2025 11:03
திருச்சி; மாசி மகத்தை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான அன்பில் சுந்தராஜ பெருமாள் திருக்கோவில், பக்தர்களால் வடிவழகிய நம்பி என்று அழைக்கப்படும் சுந்தராஜ பெருமாள் உற்சவரும், திருக்கரம்பனூர் உத்தமர் பெருமாள் என்று அழைக்கப்படும் புருஷோத்தமப் பெருமாளும் மாசி மகத்தை முன்னிட்டு நேற்று அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்பட்டு, கொள்ளிடம் ஆற்றங்கரையில் தீர்த்தவாரி கண்டருளினர். பின் அன்பில் ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் நம்பெருமாள் திருவாபரணம் அணிந்து சிறப்பு சேவை சாதித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.