மடப்புரம் கோயிலில் சீரமைப்பு பணி; பாலாலய விழாவுடன் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2025 12:03
திருப்புவனம்; சிவகங்கை மாவட்டம்மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சேதமடைந்த சிலைகளை உபயதாரர்கள் மூலம் சீரமைக்கும் பணி பாலாலய விழாவுடன் தொடங்கியது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 2017ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. சில நாட்களிலேயே அம்மன் சிலை அருகே உள்ள பூத கணங்கள் சிலை உட்பட பெரும்பாலான சிலைகள் சேதமடைந்தன. சேதமடைந்த சிலைகளை சரி செய்யாமல் அறநிலையத்துறை அதிகாரிகள் சிலைகள் மீது வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை அலங்காரமாக சுற்றி வைத்து சமாளித்தனர். பல முறை பக்தர்கள் சேதமடைந்த சிலைகளை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அறநிலையத்துறை கண்டுகொள்ளவில்லை. கோயில் உள்ள ஒன்பது உண்டியல்கள் மூலம் இரு மாதங்களுக்கு ஒரு முறை 20 முதல் 35 லட்ச ரூபாய் வரை வருவாய் கிடைத்தும்எந்த வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் உபயதாரர்கள் மூலம் சேதமடைந்த ஏழு சிலைகளை சீரமைக்க அறநிலையத் துறை அனுமதி வழங்கியதை அடுத்து நேற்று பாலாலயத்துடன் பணிகள் தொடங்கின. கோயில் வளாகத்தில் நடந்த பாலாலய விழாவில்சிவகங்கை அறநிலையத்துறை துணை ஆணையர் சங்கர், மடப்புரம் கோயில் உதவி ஆணையர் கணபதிமுருகன், நகை மத்திப்பீட்டாளர் செல்லப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாலாலயத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.