Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரம் கோயிலில் சீரமைப்பு பணி; ... நாடு முழுவதும் ஹோலி கோலாகல கொண்டாட்டம்; வண்ண  பொடிகளை தூவி உற்சாகம் நாடு முழுவதும் ஹோலி கோலாகல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் தேரோட்டம் மாசி திருவிழா கோலாகலம்; இன்று இரவு தெப்ப உற்ஸவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் தேரோட்டம் மாசி திருவிழா கோலாகலம்; இன்று இரவு தெப்ப உற்ஸவம்

பதிவு செய்த நாள்

13 மார்
2025
12:03

துாத்துக்குடி; திருச்செந்துார் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று நடந்த தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி சப்பரத்தில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான, 10ம் நாள் திருவிழாவில் நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6:00 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன. காலை 7:03 மணிக்கு விநாயகர் வீற்றிருந்த தேர் புறப்பட்டு ரதவீதி சுற்றி 7:45 மணிக்கு நிலைக்கு வந்தது. சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர் காலை 7:50 மணிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.


‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளை சுற்றிய தேர், முற்பகல் 11:00 மணிக்கு நிலை சேர்ந்தது. தொடர்ந்து தெய்வானை அம்பாள் வீற்றிருந்த தேர் 11:10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:35 மணிக்கு நிலை சேர்ந்தது. தேரோட்டத்தில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். டி.எஸ்.பி., மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 11ம் நாள் திருவிழாவான இன்று இரவு சுவாமி, அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்ஸவம் நடக்கிறது. நாளை, 12ம் நாள் திருவிழாவில் மாலை 4:30 மணிக்கு சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு சுவாமி, அம்பாள் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோயிலை சேரும் நிகழ்ச்சி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar