ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தின விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2025 06:03
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் முதல் பிரதிஷ்டை தின விழா கொண்டாடப்பட்டது.
கடந்த 2015 மார்ச் 13 ல் சபரிமலை தலைமை தந்தரி ஸ்ரீ கண்டரரு ராஜீவரரு தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. அந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பிரதிஷ்டை தின விழா கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்று பிரதிஷ்டை தின விழாவை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பஜனை நாமாவளி, கூட்டு பிராத்தனை, சரண கோஷம் உள்ளிட்டவைகளில் பங்கேற்றனர். பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. ரெகுநாதபுரம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்ப சேவா நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.