மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 34 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2025 07:03
திருப்புவனம்; திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு 40 நாட்களுக்கு ஒரு முறை பக்தர்கள் காணிக்கை செலுத்திய ஒன்பது உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படும், அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் கவிதா ( சிவகங்கை) கணபதி முருகன் ( மடப்புரம்) கோயில் ஊழியர்கள், அன்னபூரணி சேவா சங்கத்தினர். உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் 33 லட்சத்து, 28 ஆயிரத்து 574 ரூபாய், 150 கிராம் தங்கம், 418 கிராம் வெள்ளியும், கோசாலை உண்டியலில் 76 ஆயிரத்து 922 ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். ஆய்வர் அய்யனார், கண்காணிப்பார் பாஸ்கரன், சி.சி.டி.வி., கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்