1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரி வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்பல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2025 09:03
ராணிப்பேட்டை; கலவையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரி வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்பல் உற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள கலவைப் பகுதியில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மாசிமாதம் மாசிமக தெப்ப திருவிழா நடைபெற்றது.முன்னதாக கோவிலில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாளுக்கு பல்வேறு வாசனை கலந்த வண்ண பூ மலர்களை கொண்டும், தங்க ஆபரணங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்ட பட்டாபி ராமர் அலங்காரத்தில் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாளுக்கு மகா கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உச்சவர் கரிவரதராஜ பெருமாளை பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடியபடி தொளில் சுமந்தபடி வலம் வந்து பேருந்து நிலையம் அருகில் உள்ள பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட தெப்பலில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் கோவிந்தா. கோவிந்தா என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தெப்பல் திருவிழா மூன்று சுற்றுகள் வலம் வந்ததபொழுது தெப்பக்குளம் சுற்றி இருந்த பக்தர்கள் தெப்பல் வரும் பொழுது கற்பூரம் ஏற்றி பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.இந்த தெப்பல் திருவிழா காலம் காலமாக ஊரின் வளர்ச்சிக்காகவும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும் திருவிழா நடைபெற்றது.