காளஹஸ்தி சிவன் கோவிலில் ருத்யுஞ்சய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2025 10:03
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் சுயம்புவாகவும், வாயு தலமாகவும் சிறந்து விளங்குகிறது. இங்கு தினந்தோறும் மூலவர் சன்னதியிலும், துணை சன்னதிகளிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷேசப் பூஜைகள் நடைப்பெறுகின்றன. இந்த நிலையில் கோயில் வளாகத்தில் உள்ளம் ருத்யுஞ்சய சுவாமி சன்னதியில் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் பல்வேறு சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வழக்கம் போல் நேற்றும் ம்ருத்யுஞ்சய சுவாமி சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த சன்னதியின் சிறப்பு பல உள்ளன. அதில் பக்தர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தால் ம்ருத்யுஞ்சய சுவாமி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் சுவாமிக்கு செய்கின்றனர். இது போன்ற பல சிறப்புகள் உள்ளன. இந்த நிலையில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.