பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் திரிசதி அர்ச்சனை, செவ்வாய் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2025 10:03
கோவை; கோவை பெரியநாயக்கன்பாளையம் -குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை மற்றும் சுப்பிரமணியம் திரிசதி அர்ச்சனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமணம் கை கூடவும், கணவன் மனைவி ஒற்றுமை, ஆரோக்கியமான வாழ்க்கை, ஐஸ்வர்யம் பெறவும் வேண்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் மூலவர் முருகப்பெருமான் விபூதி காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.